நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
கரூர்! தம்பிதுரையை அடித்து தூக்கும் ஜோதிமணி!
இதில் தமிழக்த்தில் மொத்தம் உள்ள 38 தொகுதிகளில், திமுக கூட்டணி 33 தொகுதிகளிலும் , அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் லோக் சபா தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 17,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக கட்சி வேட்பாளர் தம்பிதுரையை பின்னடைவு அடைந்து உள்ளார். இதனையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முன்னணி நிலவரத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.