பொதுவெளியில் சமூக இடைவெளி கூட விடாமல்..! இவ்வளவு நெருக்கமா? செந்தில் பாலாஜி - ஜோதிமணி புகைப்படத்தை வெளியிட்டது யார்?

பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் கல்லால் அடிக்க வேண்டும் என்று டிவி விவாதத்தில் கூறிய ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில்பாலாஜி உடனடியாக அறிக்கை வெளியிட்ட நிலையில் அவர்கள் இருவரையும் இணைத்து பாஜக ஆதரவாளர்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.


நியுஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பிரதமர் மோடியை மக்கள் கல்லால் அடிக்க வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பாஜக செய்தி தொடர்பாளர் கரு நாகராஜன், ஜோதிமணி ஒரு 3ந் தர பொம்பளை என்றும், கேவலமான பெண் என்றும் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்எல்ஏவும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவருமான செந்தில்பாலாஜி உடனடியாக ட்விட்டரில் தனது கண்டனங்களை பதிவு செய்தார். ஜோதிமணியை கடுமையாக விமர்சித்த நாகராஜனை செந்தில் பாலாஜி மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.

அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு பிரச்சனை என்றால் அமைதியாக இருக்கும் செந்தில் பாலாஜி ஜோதிமணிக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே அறிக்கை விடுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதோடு மட்டும் அல்லாமல் அண்ணன் - தங்கை என்று கூறிக் கொண்டு நடுரோட்டில் செந்தில் பாலாஜி - ஜோதிமணி அடிக்கும் கூத்தை பாருங்கள் என்று புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அண்மையில் கொரோனா நிவாரணம் வழங்க செந்தில்பாலாஜியும் - ஜோதிமணியும் சென்ற போது நெருக்கமாக பேசிச் சென்றனர் இந்த புகைப்படத்தை வெளியிட்டு கொரோனாவுக்கு சமூக இடைவெளியை கூட பின்பற்றாமல் இருவரும் அப்படி என்னதான் பேசுகிறார்களோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பாஜகவினர்.


இதே போல் சில நாட்களுக்கு முன்னர் கரூரில் செந்தில்பாலாஜி நடத்திய போராட்டத்தில் அவருக்கு அருகே ஜோதிமணி அமர்ந்திருந்தார். அப்போது செந்தில் பாலாஜி தொடை ஜோதிமணி தொடை மீது இருந்தது. இந்த புகைப்படத்தையும் வெளியிட்டு என்ன தான் அண்ணன், தங்கை என்றாலும் ஒரு அளவு வேண்டாமா என்று கிண்டல் செய்து வருகின்றனர் பாஜக ஆதரவாளர்கள்.