ஜோதிமணியை செந்தில் பாலாஜி பொண்டாட்டியாக்கிய பெருசு! அரவக்குறிச்சி கூத்து!

வெள்ளையும் சொள்ளையுமாக செந்தில் பாலாஜி ஊர் ஊராகப் போய் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்காக வாக்கு சேகரித்தார். அந்தத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் அரவக்குறிச்சி தேர்தல் வந்தேவிட்டது.


தனக்கு வாக்கு சேகரிக்க உதவிய செந்தில் பாலாஜிக்காக இப்போது ஜோதிமணி பதில் உபகாரம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால் காலை 7 மணிக்கே செந்தில்பாலாஜி வீட்டில் ஆஜராகி விடுகிறார். அதன்பிறகு இருவரும் எல்லா இடங்களிலும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

வேட்பாளர்களைக் கண்டதும் ஆரத்தி எடுத்து கையில் கொஞ்சம் காசு வாங்குவது கிராமத்துப் பெண்களின் வழக்கம். அந்த வகையில் கிராமத்தில் ஓட்டு வேட்டையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்த பெண், அப்படியே ஜோதிமணிக்கும் ஒரு பொட்டு வைத்தார்.
அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை, ‘‘ஏம்ப்பா... பொண்டாட்டி இப்படி துரும்பா போயிடுச்சு, கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோப்பா...’’ என்று சொல்ல, கூடியிருந்த அத்தனை பேரும் வாயை மூடி சிரித்திருக்கிறார்கள்.

உடனே விவரமான ஒரு கட்சிக்காரர், ‘‘ஏம்மா, அது அவரோட சம்சாரம் இல்லை’’ என்று வேகமாக சொல்ல, அந்தப் பெண் விவரம் புரியாமல், ‘‘பிறகு எதுக்கு ஒட்டிக்கிட்டே வருது’’ என்று புலம்பியபடியே நகர்ந்தாராம்.
கட்சியினர் சொல்லிச்சொல்லி சிரிக்கிறார்கள்.