குழந்தைகள் சருமத்திற்கு தீங்கு! ஜான்சன் & ஜான்சன் ஷாம்பூவுக்கு அதிரடி தடை!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான ஷாம்பூ விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருந்து சோதனை ஆய்வகத்தில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான ஷாம்பூ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அந்த ஷாம்பில் குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பார்மால்டிஹைடு ரசாயனம் கலக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் தரக் கொள்கைகளுக்கு மாறாக தரமற்ற முறையில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் ஷாம்பூ தயாரித்து விற்பனை செய்வதையும் ஆய்வு முடிவுகள் உறுதி செய்தது. இதை அடுத்து அந்நிறுவனத்தின் குழந்தைகள் ஷாம்பூ விற்பனைக்கு தடை விதித்து குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் பின்பற்றுமாறும் குழந்தைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் ஷாம்பூவை இருப்பு வைத்திருந்தால் பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.