ஜோ மைக்கேல் பிரவீண் திடீர் கைது..! பிக்பாஸ் மீரா மிதுனிடம் மோதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் குறித்து அடுத்தடுத்து அவதூறு தகவல்களை வெளியிட்டு வந்த ஜோ மைக்கேல் பிரவீண் கைது செய்யப்பட்டுள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தவர் ஜோ மைக்கேல் பிரவீண். பேஷன் ஷோக்கள், ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்று பிசியாக இருந்து வந்த ஜோ மைக்கேல் அவ்வப்போது மீரா மிதுன் குறித்து கூறிய தகவல்களால் பிரபலம் ஆனார். 

மீரா மிதுனுக்கு பல நடிகர்களுடன் தொடர்பு உள்ளது, நடிகர்களுடன்பேசுவதை மீரா செல்போனில் ரெக்கார்ட் செய்கிறார் என்றெல்லாம் போட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் தன்னை கொலை செய்ய மீரா மிதுன் முயற்சிப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு ஜோ மைக்கேல் பரபரப்பை கிளப்பினார்.

மீரா மிதுன் - ஜோ மைக்கேல் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஜோ மைக்கேல் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக ஜோ கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். யூட்யூப் சேனல் மூலம் பெண்கள் குறித்தும், பெண் பிரபலங்கள் குறித்தும் ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியிட்டதாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

ஆனால் யார் கொடுத்த புகாரில் ஜோ மைக்கேல் கைது செய்யப்பட்டார் என்கிற தகவல் வெளியிடப்படவில்லை. மேலும் ஜோ மைக்கேலுக்கு எதிராக மீரா மட்டுமே புகார் அளித்திருந்தார். இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.