ஏண்டி வீட்டுக்குள்ள வந்து என்ன வேலை பார்க்குற? இளம் பெண்ணை பிடித்து துடைப்ப கட்டையால் விளாசிய விழுப்புரம்!

திண்டிவனத்தில் அடையாளம் தெரிய பெண் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய பெண்ணை, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடி, உதை போல் மிகவும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் மற்றும் அயனாவரம் பகுதிகளில் அடுத்தடுத்து 5 வீடுகளில் தொடர்ந்து பணம், நகை திருடுப் போன வந்த வண்ணம் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்றாக இணைந்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் பழைமாதரி திருட்டு சம்பவம் நடந்துள்லது. இந்நிலையில், உஷார் ஆனா பொதுமக்கள் ஊருக்குள் வந்து செல்லும் புதிய நபர்களை கண்காணித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாதப் பெண் ஒருவர், அங்கிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும், ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி தப்ப முயன்றப் பெண்ணை சுற்றி நின்று சரமாரியாகத் தாக்கினர்.

திருடிய நபர் பெண் என்பதால் அங்குள்ள பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி பிடிபட்ட பெண்ணின் முகத்தில் ரத்தம் வழிய மிகவும் பயங்கரமாகத் தாக்கிய உள்ளார். இதற்கிடையில், சுற்றி நின்றிருந்த ஆண்களில் சிலர் கையை உடை, காலை உடை எனக் கூறி அந்த பெண்ணை தாக்கி உள்ளனர். இதனையடுத்து இந்த பெண் பிடிப்பட்டதை அலறிந்து காவல்துறையினர். சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து விசாரித்தும் வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பொதுமக்களிடம் அறிவுரை கூறினார். சந்தேகத்திற்கிடமான இதுபோன்ற சமயங்களில் பிடிபடும் நபர்களை காவல் துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும், பொதுமக்கள் சட்டதினை கையில் எடுக்க கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், அனைவரும் ஒன்றுகூடி திருடர்களை பிடிப்பது நல்ல விஷயம் தான் ஆனால், ஊர்மக்களே சேர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.