ஆந்திராவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளின் வாழ்வாதம் கருதி நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார அதிரடி அரசன் ஜெகன்மோகன் !
ஆப்பரேசனுக்கு பிறகு பெட் ரெஸ்ட்! நோயாளிகளுக்கு மாதம் ரூ5000 உதவித் தொகை! ஜெகனாரின் அடுத்த அதிரடி!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஓ.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனாக ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றது முதலே அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து அம்மாநில மக்களை அசத்தி வருகிறார். சந்திரபாபு நாயுடு இருந்தபோது கிடைத்த சலுகைகளை விட அதிக சலுகைகள் கிடைப்பதாக நம்பும் பொதுமக்கள், தாங்கள் ஜெகன்மோகனுக்கு அளித்த வாக்குகள் வீண் போகவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் நோய் பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகள் ஓய்வெடுக்கும் காலங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.225 வீதம் என மாதம் ரூ.5,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டட்ததிற்கு பெயர் ஆரோக்கியஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டம். அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்தில் நோயாளியின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும்.
26 சிறப்பு பிரிவுகளில், 836 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் ஆண்டு வருமானம் 5,000 ஆயிரத்திற்கும் குறைவானர்களுக்கு, மருத்துவ செலவுக்காக அறிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரும் ஜனவரி மாதம் முதல், டெங்கு உள்ளிட்ட 2,000 வகையான நோய்களுக்கான மருத்து செலவுகளும் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.