நான் அழுத மாதிரி எந்த பெண்ணும் அழுதிருக்க முடியாது..! தடைகளை உடைத்தெறிந்த ஜாஸ்மின்! யார் இவர்?

தனது 18 வயசு முடிஞ்ச மூணாவது நாளே திருமணம் செய்து கொண்ட ஜாஸ்மினின் வாழ்க்கை கடைசி வரைக்கு கனவாக போகா, அன்று விரத்தியில் விழுந்து இன்றைக்கு பல சோதனைகளை முறியடித்து சாதனை பெண்ணாகா வாழும் ஜாஸ்மின் பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக.


ஜாஸ்மின் ஆகிய நான் எனது பள்ளி பருவத்தை முடித்தேன் கல்லூரி படிக்கனும் என்ற கனவுடன் இருந்த எனக்கு அன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குள்ளே நுழைஞ்சபோது ஒரே கூட்டம் உள்ளே இழுத்துட்டுப் போன எங்கம்மா, சீக்கிரமா டிரெஸ்ஸை மாத்திட்டு வா'ன்னு சொன்னாங்க வந்தவங்களுக்கு டீ கொடுக்கச் சொன்னாங்க. அப்புறம்தான் அது என்னைப் பெண்பார்க்க வந்த கூட்டம்னு தெரிஞ்சது.

பின்னர் கல்யாணமெல்லாம் வேண்டாம் படிக்கனும்னு அழுத என் பேச்சை கேட்காத பெற்றோர்கள் எனது 18 வயசு முடிஞ்ச மூணாவது நாள் கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க.

இதுதான் விதி என்று எனது திருமணம் வாழ்க்கையை ஆரம்பிக்க தொடங்கிய நான் முதல் இரவுக்கு தயாரானேன் . அறைக்குள்ளே நுழைஞ்ச என்னை அவன் வன்முறையா அணுகினான். என்னை அவன் மனைவி மாதிரி நடத்தாம, மூன்றாம் மனுஷி மாதிரி தாக்கினான். அன்னிக்கு நடந்தது முதலிரவில்லை! பாலியல் வன்கொடுமை ! பல வருடங்கள் கடந்தும் அந்த வலியை மறக்க முடியவில்லை  என்னால்.

இதற்கிடையில், அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் அம்மா, அப்பாகிட்ட, இனியும் இந்த உறவைத் தொடர முடியாது என்று எண்ணி விவாகரத்தும் பெற்றேன். ஆனா அது என் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை, அதைவிட பயங்கரமான விஷயங்களுக்கான இன்னோர் ஆரம்பமா மாறியது. அக்கம்பக்கத்துல எல்லாரும் வாழாவெட்டின்னு சொன்னாங்க.

பெற்றோர்களும், நீ இப்படி இருக்கிறது எங்களுக்குப் பெரிய பாரம். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்'னு மறுபடி வீட்டுல வற்புறுத்தினாங்க. கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க பார்க்கிற பையனோடு நான் தனியா பேசணும்'னு கண்டிஷன் போட்டேன். சம்மதிச்சாங்க. மனதை தயார்படுத்து இரண்டாம் திருமணத்திற்கு தயார் ஆனேன். நல்லதா அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துச்சு மாப்பிள்ளையுடனான அந்தச் சந்திப்பு. 

கொஞ்சம் காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம். பிறகு தான் தெரிய வந்தது முதல்ல திருமணம் செய்தவன் மனநலம் சரியில்லாதவன்னா, அடுத்து வந்தவன் போதை அடிமையா இருந்தான். அதுவும் 24 மணி நேரமும் போதை. மிருகத்தை அடிக்கிற மாதிரி என்னை அடிச்சுக் கொடுமைப்படுத்துவான். வாழ்க்கையின் மேல எனக்கிருந்த ஒரே நம்பிக்கையை சிதைச்சு பின்னர் அவனிடமும் இருந்து விவாகரத்து பெற்றேன். 

பின்னர் அப்பா, அம்மாவுக்கு பாரமாக இருக்க கூடாதுனு நினைச்சு பெங்களூருக்கு சென்று அங்கு பிரபலமான ஜிம் ஒன்றில் ஃபிட்னெஸ் பயிற்சியாளராக பணியாற்றினேன்.

தற்போது ஃபிட்னெஸ் பயிற்சியாளராக கெத்தாக வலம்வரும் ஜாஸ்மின் சொல்லுவது என்னவென்றால் வாழ்க்கையில் நிறைய அழுது முடிச்சிட்டேன். அதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு இப்போ சிரிக்கிறேன். இனியும் சிரிச்சிட்டேதான் இருக்கப்போறேன் என்று சிறு புன்னகையுடன் கூறுகிறார்.