எந்த காரணத்தைக் கொண்டும் ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது என்று வேறு யார் சொன்னாலும் கண்டுகொள்ளாமல் விடலாம். ஆனால், சொன்னது அவரது உடன் பிறந்த அண்ணன் மு.க..அழகிரி. அவர், இத்தனை காலமும் தி.மு.க.வில் குப்பை கொட்டியவர்.
ஜனவரி 30 வரப்போகுது... அழகிரியும் நட்டாவும் சந்திக்கப் போறாங்களா..? டென்ஷனில் ஸ்டாலின்.
தான் சொல்வதை நிரூபிக்கும் வகையில் அழகிரி அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட இருக்கிறார் என்பதுதான் படு ஹாட். ஆம், என்னுடைய அடுத்தகட்ட முடிவை விரைவில் தெரிவிக்கிறேன் என்று அழகிரி கூறியிருந்தார். அந்த வகையில் வரும் ஜனவரி 30ம் தேதி அழகிரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் படு ஹாட் சமாசாரம்.
ஆம், ஜனவரி 30-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். அங்கு கட்சியின் பூத் ஏஜெண்டுகள் மத்தியில் அவர் பேசுகிறார். அதே 30-ம் தேதிதான் அழகிரியின் பிறந்த நாள். மதுரைக்கு வரும் ஜே.பி.நட்டா அப்படியே அழகிரியையும் சந்தித்து வாழ்த்து கூறக்கூடும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்க்கிறது.
அந்த நேரத்தில் பா.ஜ.க.வில் இணைகிறாரோ இல்லையோ, தி.மு.க.வை தோற்கடிக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். அது என்ன என்பதுதான் சஸ்பென்ஸ். இந்த விவகாரம்தான் ஸ்டாலினுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துவருகிறது. எப்படியும் ஜெயித்துவிடலாம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் நேரத்தில், இப்படி அழகிரி இடைஞ்சல் செய்கிறாரே என்று தடுமாறி வருகிறார்.
அழகிரியை ஏற்கவும் அச்சம், விலக்கவும் அச்சம். நல்லா இருக்கிறது ஸ்டாலினின் நாடகம்.