அசுர வேகம்! ஓவர் கூட்டம்! மினி பேருந்தில் பயணித்த 33 பேர் பலி! எங்கு தெரியுமா?

ஜம்மு காஷ்மீர் பகுதியில் வேகமாக வந்த மினி பஸ் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் 33 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஸ்த் வார்பகுதியில் காலையிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த மினி பஸ், சரியாக சிர்க் வாரி பகுதியை நெருங்கிய போது வேக கட்டுப்பாடு இல்லாமல் நிலைத்தடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 30 க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர், மேலும் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனர்.

இந்த நிலையில் மினி பஸில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்தது தான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது, இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.