பிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா! படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்!

ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் உள்ள பெண்கள் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்ததாக ஒருவரை கைது செய்துள்ளனர்.


இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் நகரில் ஜேம்ஸ்பாண்ட் கதையம்சத்துடன் கூடிய 25-வது பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் டேனியல் க்ரெய்க் உள்ளிட்ட நடிகர் கள் மற்றும் நடிகையர்கள் நடித்து  வருகின்றனர். 

இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் பைன்வுட் ஸ்டுடியோவில் பெண்கள் கழிவறை உள்ளது. இதில் தான் படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் அந்த கழிவறையை உபயோகிப்பது வழக்கம்.

இந்த நிலையில் அந்த பாத்ரூமிற்கு சென்று நடிகை ஒருவர் மேற்புறத்தில் சின்ன சிவப்பு நிற நிழல் தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அது என்ன என்று பார்த்த போது அது சிறிய கேமரா. இது பெரும் பிரச்சினையானது.

இது தொடர்பான புகாரின் பேரில் வந்த போலீசார் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை மற்றும் புலனாய்வின் அடிப்படையில் குற்றவாளியை அவர்கள் கண்டுபிடித்தனர். 

49 வயதான அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்தும் போது அவர்களின் மறைக்கப்பட்ட அங்கங்களை  பார்ப்பதற்காக காமிராவை பொறுத்தியதாகவும், அவ்வாறு பார்ப்பதன் மூலம் தான் பாலியல் தன்னிறைவு அடைவதாகவும் தெரிவித்தான். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாதாதல் ஜேம்ஸ்பாண்ட் 25 என்றே அழைக்கப்படும் இந்தப் படம் வரும் 2020-ஆம் ஆண்டிய் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.