மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு ஆயுள் அதிகம்..! உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அசத்தல் ஆராய்ச்சி முடிவு!

வார்ஸா: மகளை பெற்ற தந்தையர் நீண்ட நாள் வாழ்வார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


போலந்து நாட்டில் ஜாகிலோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இதுபற்றி  ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், ஒவ்வொரு நபரும் நீண்ட நாள் உயிர் வாழ்வதில் உள்ள ஒரு ரகசியம் ஒன்று தெரியவந்துள்ளது. இதன்படி, நிறைய குழந்தைகள் பெற்றிருந்தாலும், மகன்களை பெற்றிருந்தாலும் ஒருவரால் நீண்ட நாள் நிம்மதியாக உயிர் வாழ முடியாதாம். ஆனால், நிறைய மகள்கள் அல்லது ஒரே ஒரு மகள் இருந்தாலும் சரி, அவர்களை பெற்ற தந்தை நீண்ட நாள் உயிர் வாழ்வாராம்.  

காரணம், பெண் குழந்தைகள் தந்தைக்கு அதிக தொல்லை தருவதில்லை, தவிர, திருமணமாகி கணவனுடன் சென்றுவிட்டால், தந்தையின் சுமையில் பாதி குறைந்துவிடுகிறது. அதேசமயம், முதுமையில் தந்தையை பத்திரமாக பராமரிப்பதில் பெண் குழந்தை அக்கறை காட்டுகின்றனர். இதுபோன்ற காரணங்களால், அவர்களின் தந்தை நீண்ட நாள் உயிர் வாழ நேரிடுகிறது. ஆனால், ஆண்களை பெற்ற தந்தைகளோ வாழ்நாள் முழுக்க பல சிக்கலை சந்தித்து மன அழுத்தத்திலேயே சீக்கிரம் போய் சேர நேரிடுகிறது என்றும், அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  

இந்த செய்தி, பெண் குழந்தைகள் வேண்டாம், பெண் குழந்தைகள் பிறந்தால் கழுத்தை நெரித்துக் கொல்வோம், என்றெல்லாம் சவால் விடும் பெற்றோர் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.