அதிவேகத்தில் ஆடி கார்! படுவேகத்தில் மோட்டார் பைக்! 30 அடிக்கு தூக்கி வீசப்பட்ட இளைஞர்! பதைபதைக்க வைக்கும் காட்சி!

வேகமாக வந்த ஆடி கார் மோதி 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நபர். அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள்.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேகமாக வந்த ஆடி கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் 30 அடி தூரத்திற்கு சுழற்றி தூக்கி வீசப்பட்டார். 

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அபய் தாகர் என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஜேடிஏ சர்க்கிள் அருகே சென்று கொண்டிருந்தார். அந்தச் சாலையில் போக்குவரத்து சிக்னலை அவர் கடந்த போது கிடைமட்ட சாலையில் அதிவேகத்தில் ஒரு ஆடி கார் வந்து கொண்டிருந்தது.

இறுதி நேரத்தில் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இருசக்கர வாகனத்தின் மீது அந்த ஆடி கார் பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனம் சாலையை உரசியபடி அதிவேகத்தில் விழுந்து நொறுங்கிய அதை ஓட்டி வந்த நபர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார்.

சுமார் 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஆடி காரின் ஓட்டுனர் சித்தார்த் சர்மா அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினார். இருப்பினும் அவரை பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது ஆடி கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது அதிவேகமாக கார் ஓட்டுதல் வேண்டுமென்றே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடைய விபத்து தொடர்பான அதிர்ச்சிகர சிசிடிவி வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.