எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி மூணு பேருக்கும் ஜெயில் ரெடி! எப்போ, எப்படி?

தி.மு.க. பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டத்தை தமிழகமெங்கும் நடத்துவதற்கு ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


அப்படி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் குறித்த புத்தகத்தை வெளியிட்டு ஆவேச உரை நிகழ்த்தினார்,. அப்போதுதான் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, மலையளவு ஊழல் செய்துவரும் தங்கமான மணி, தங்கமணி. அவர் மின்வாரிய உதிரி பாகங்கள் தொடங்கி பணியாளர் நியமனம் வரையிலும் ஊழல் செய்து வருகிறார். இவர்கள் யாரும் தப்பவே முடியாது என்று பேசினார்

மேலும், ’நாட்டில் நடப்பது எதுவும் எடப்பாடிக்குத் தெரியாது. ஆனால் எதில் கமிஷன் அடிக்கலாம் என்பது மட்டும் தெரியும், கடப்பாறையை விழுங்கிவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி இருக்கிறார்” என்றும் எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்திருக்கிறார்.

விரைவில் தி.மு.க. வெற்றி அடைந்து திமுக கோட்டையில் இருக்கும், இப்போது கோட்டையில் இருப்பவர்கள் சிறைச்சாலையில் இருப்பார்கள்” என்று ஆவேசமானார் ஸ்டாலின்.