ஆந்திரா! நாயுடுவை விரட்டி விரட்டி வெளுக்கும் ஜெகன் ரெட்டி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.


இதில் ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில்,  ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி  148 தொகுதிகளிலும் , தெலுங்கு தேச   கட்சி  23 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் லோக் சபா மற்றும் சட்டமன்ற  தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பின்னடைவு தெலுங்கு தேச கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.  ஏனெனில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்  ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி 67 இடங்களை வென்றது. ஆனால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி 148 இடங்களை முன்னிலை வகித்து  சாதனை படைத்துள்ளது.

இது தெலுங்கு தேச கட்சிக்கு மிகப்பெரிய  பின்னடைவு என்றே கூறலாம்.