இந்துக்களுக்காக ஜெகன்மோகன் போட்ட அவசர சட்டம்! தமிழகமும் சட்டம் போட்டு வீரமணி, ஸ்டாலினை சிறையில் தள்ளுமா?

இந்து மக்களை நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கும் வகையில் பேசினால், எழுதினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அவசர சட்டம் போட்டுள்ளார். இந்த சட்டத்துக்கு பா.ஜ.க. பெரும் வரவேற்பு கொடுத்துள்ளது.


இந்து கோயில்களில் புகைபிடித்தல், மது அருந்துதல், பான் முதலியவற்றை பயண்படுத்துதல், எச்சில் துப்புதல் போன்ற செயலில் ஈடுபடுவோருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆந்திர மாநில ஹிந்து அறநிலையத்துறை சட்டப்படி அறிவிப்பு வெளியிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி.

ஹிந்து மதத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது அல்லது தரக்குறைவாக விமர்சிப்பது, சொல்லாடல் மூலம் தாழ்த்துப்பேசுபவது போன்ற செயலில் ஈடுபடுவோர்கள் இந்திய அரசியல் சட்டம் மற்றும் ஆந்திர மாநில அறநிலையச்சட்டப்படி பெயிலில் வரமுடியாத குற்றம் புரிந்தவராக தக்க தண்டனைக்கு ஆட்படுவர்.

இந்துக்கள் என்றாலும் இந்தக் குற்றம் செய்தால் தண்டனை உறுதி என்று சொல்லியிருக்கிறார். அது மட்டுமின்றி இனிமேல் மசூதி மற்றும் சர்ச் முதலியவை புதிதாக கட்டுபவர்கள், அந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும் என்றும் உத்தரவு போட்டுள்ளார்.

வீதிகளில், தனியாகவோ, கூட்டாகவோ, வாகனம் மூலமாகவோ, அச்சடித்த காகிதம் மூலமாகவோ, மதப்பிரசாரம் செய்பவர்களை, தடுத்து நிறுத்தும் அதிகாரம் அந்தந்த கிராம அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இப்படி ஓர் சட்டத்தை தமிழ்நாட்டில் எடப்பாடி கொண்டுவருவாரா என்பதுதான் கேள்வி. ஏனென்றால் இந்த சட்டம் வந்தால் தி.க.வும், தி.மு.க.வினரும் ஒட்டுமொத்தமாக சிறையில்தான் காலம் தள்ள வேண்டியிருக்கும்.