நாட்டின் ஒட்டு மொத்த போலீசையும் நெகிழ வைத்த ஜெகன் மோகனின் ஒரே ஒரு உத்தரவு!

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.


அதில் ஒன்று தான் ஆந்திர போலீசாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்கப்படும் என்ற திட்டம். இத்திட்டமானது இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன்ரெட்டி மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் இந்நிலையில் துப்புரவு பணியாளர்களுக்கான

ஊதியத்தை உயர்த்தியும் விவசாயிகளுக்கு என பல்வேறு நலத் திட்டங்களையும் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மற்றும் ஆந்திராவில் சட்ட விரோதமாக செயல்படும் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் எனவும் மாநில போக்குவரத்துக் கழகத்தை அரசே ஏற்று நடத்தும். ஆந்திர மாநிலத்தில் மணல் அள்ளும் தடைவிதித்து கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் நிலத்திற்காக செயல்படுத்தியுள்ளார்  அம்மாநில முதலமைச்சர்.

அத்திட்டத்தில் ஒன்றான ஆந்திர மாநில போலீஸாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்படும் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதுகுறித்து அம்மாநில காவல்துறை ஆணையர் கூறியபோது காவல் துறையில் உள்ளவர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  19 மாடல் வகையிலான விடுமுறை திட்டங்கள் உள்ளன. அதில் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்து அதன்படி விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு தெரிவித்துள்ளார். மற்றும் வேறு ஏதேனும் திட்டத்தில் மாற்றம் இருந்தால் காவலர்கள் சொல்லும் குறைகளுக்கு ஏற்ப அத்திட்டத்தில் மாற்றங்கள் செய்து தரப்படும் என மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமானது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார். இத்திட்டமானது உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் இந்த விடுமுறை திட்டம் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.