முஸ்லீம் என்பதால் ஜாபர் சேட் அவுட்! டி.ஜி.பி. ஆகிறார் திரிபாதி!

இப்போது கோட்டை வட்டாரத்திலும் போலீஸ் வட்டாரத்திலும் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வது அடுத்த டி.ஜி.பி. யார்? அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதுதான். இந்த இரண்டு கேள்விக்கும் இந்த வாரமே விடை கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.


இப்போது டி.ஜி.பி-யாக இருக்கும் குட்கா சர்ச்சையில் சிக்கிய டி.கே.ராஜேந்திரனின் பதவி அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த விவகாரத்தில் அடுத்து தேர்வு செய்யவேண்டிய மூன்று பேர் பெயர் இறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது. தமிழக அரசு அனுப்பிய உயர் அதிகாரிகள் 18 பேர் பட்டியலில் இருந்து மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூன்று பேரை அனுப்பிவிட்டது.

இப்போது ரேஸில் திரிபாதி, ஜாபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, தமிழ்செல்வன்.. ஆகியோர் மட்டுமே முன்னணியில் இருக்கிறார்கள். இதில் கடைசி ரேஸில் திரிபாதி மற்றும் ஜாபர் சேட் என்பதில் வந்து நின்றது. ஜாபர்சேட்டுக்கு இப்போது டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், திரிபாதிக்கு மத்திய அரசின் ஆதரவு பரிபூரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. பிராமின் என்ற அடிப்படையிலும் திரிபாதி மத்திய அரசின் விருப்பமாக தெரிவிக்கப்பட்டுள்ளார். ஜாபர் சேட் முஸ்லீம் இனத்தவர் என்பதால் அவர் பெயர் தேர்வு செய்யப்படவில்லை என்கிறார்கள். ஜாபர் சேட் தி.மு.க. அபிமானி என்ற பெயர் உள்ளது.

மேலும் ஜாபர் சேட் மீது இருந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடியாகிவிட்டது என்றாலும், மீண்டும் கேஸ் போடுவதற்கு சிலர் தயாராகி வருகிறார்களாம். அதனால் எந்த சர்ச்சையிலும் சிக்காத திரிபாதிக்கே கொடுத்துவிடலாமா என்று எடப்பாடி பழனிசாமியும் கேட்கத் தொடங்கிவிட்டாராம். பார்க்கலாம்.