முன்னாள் முதல்வர் பிறந்த நாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இனிமேல் பிப்ரவரி 24ம் தேதி என்றால் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாம்..! ஜெ. பிறந்த நாள் கொண்டாட்டம்.

இன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சமூக நலத்துறை சார்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், “குழந்தைகள் மீது மிகுந்த பற்றும், மாறாத அன்பும் கொண்டு, குழந்தைகளைக் காணும்போதெல்லாம் அவர்களை உச்சி முகர்ந்து வாழ்த்தி மகிழும் தாயுள்ளம் கொண்டவர் ஜெயலலிதா. குறிப்பாக, பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்.
அன்னை தெரசா அவர்களால் பாராட்டப்பட்டதொட்டில் குழந்தைகள் திட்டம்,பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், பெண் கல்வியை ஊக்குவிக்க, படித்த பெண்களுக்குக் ஊக்கத் தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம், போன்ற புதுமையான திட்டங்கள் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
குழந்தைகளுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூரத்தக்க வகையில், அவரின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை, க்மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது” என்று அறிவித்தார்.
அத்துடன் நில்லாமல், “அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்துக் கொள்ள இத்தொகை ஏதுவாக அமையும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், தமிழக அரசு, தாய் தந்தை நிலையிலிருந்து அவர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும்.
இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்’’ என்றும் தெரிவித்தவர், “தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு,
அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்” என்றும் கூறினார்.
சூப்பரப்பு...