சுமார் 15 ஆயிரம் ஆடுகளுடன் புறப்பட்ட பிரமாண்ட கப்பல்..! நடுக்கடலில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட பயங்கரம்!

இத்தாலி நாட்டின் ருமேனியா அருகே 14,600 ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இத்தாலியின் தென் கிழக்கு நகரமான காண்ஸ்டாண்டிலிருந்து சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த குயின் ஹிந்த் சரக்கு கப்பல் கன்ஸ்டன்ட் துறைமுகத்திற்கு அருகில் நகரத்திற்கு அருகே உள்ள மிடியா துறைமுகத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் சிரியா நாட்டை சேர்ந்த 22 பேரும் கடலில் தத்தளித்த பொழுது மீட்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் சரக்கு கப்பலில் ஏற்றப்பட்ட 14,600 ஆடுகள் மீட்க மீட்பு படையினரால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி கப்பலின் அருகில் நீந்திக் கொண்டிருந்த சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆடுகளை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

பின் இதுகுறித்து பாதுகாப்பு மீட்பு படை செய்தித் தொடர்பாளர் பேசிய பொழுது சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆடுகளை மீட்பு துறை மீட்டுள்ளது. மீதமுள்ள ஆடுகள் நீரில் மூழ்கி விட்டதாக நம்ப படுகிறது. ஆனால் முடிந்த வரையில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நள்ளிரவில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் மீட்பு பணி தொடங்கியுள்ளது. இன்று காலை மீண்டும் ஆடுகள் மற்றும் கப்பல் மீட்பதற்கு மீட்பு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் முடிவடைந்த பின்பு விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.