பெட்டி பெட்டியாக பணத்துடன் சிக்கிய விவகாரம்! திமுக பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்!

பெட்டி பெட்டியாக மூட்டை மூட்டையாக பணத்துடன் சிக்கிய காரணத்தினால் பொருளாளர் பதவியை துரைமுருகன் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


வேலூர் தொகுதியில் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு தனது மகன் கதிர் ஆனந்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் சீட் வாங்கினார். எப்படியேனும் இந்த தேர்தலில் தனது மகளை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக துரைமுருகன் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் இருந்து கோடி கோடியாக பணம் சிக்கியுள்ளது.

திமுக பொருளாளர் ஆக இருக்கும் துரைமுருகன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியிருப்பது அகில இந்திய அளவில் அக்கட்சிக்கு பெரிய அளவில் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுக்கிறது என்று அதிமுக பிரச்சாரம் செய்வதற்கும் வழி வகையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேலூர் தொகுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவின் தேர்தல் பணிகளை துரைமுருகன் விவகாரம் பெரிதும் பாதித்துள்ளது. 

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது அது குறித்த தகவலை உடனடியாக ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்கள். வீட்டில் ஒன்றும் சிக்கவில்லை என்று துரைமுருகன் கூறியதால் ஸ்டாலின் டென்ஷன் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் பெட்டி பெட்டியாக சிக்கியதாக வீடியோ வெளியேறியதால் ஸ்டாலின் தற்போது பெரும் டென்ஷன் ஆகி உள்ளார்.

திமுக பொருளாளர் எனும் மிக உயரிய பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி கட்டுக்கட்டாக பணத்துடன் துரைமுருகன் சிக்கியதால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளதாக ஸ்டாலின் கருதுகிறார் என்று சொல்கிறார்கள். திமுக போன்ற ஒரு மிகப்பெரிய இயக்கத்திற்கு பொருளாளராக இருப்பவர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாகவும் ஸ்டாலின் தரப்பு கருதுகிறது. 

இதனால் திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகனை தேர்தலுக்குப் பிறகு விலகுமாறு ஸ்டாலின் தரப்பு கேட்கும் என்று கூறப்படுகிறது. இல்லை என்றால் துரைமுருகனை பொருளாளர் பதவியில் இருந்து விலகி விடுவார் என்றும் சொல்கிறார்கள்.