48 வயது நடிகையுடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஈஸியா இருந்தது! 24 வயது இளம் நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகை தபுவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது எளிமையாக இருந்ததாக கூறும் இளம் நடிகர் இஷான் கட்டர்.


1980ஆம் ஆண்டு வெளியான பஸார் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் தபு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை தபு. 48 வயதான ஒரு மூத்த நடிகையான தபு கொஞ்சமும் முதிர்ச்சி தெரியாத நடிகையான அவர் பாலிவுட்டில் இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை தபு எ சூட்டபிள் பாய் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் காட்சிகள் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது. 

இந்த சீரியல் வரும் ஜூன் மாதம் முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் வர்ண்ணிப்பு மிக்கதாக அமைந்துள்ளது. அந்த காட்சிகளை சமூக வளைதளங்களில் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றது. 

தற்போது இந்த காட்சிகளை பற்றி செய்தியாளர் சந்திப்பில், சீரியலில் தபுக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டர், தபுவுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது தபுவுடன் ரொமான்ஸ் செய்வது ரொம்பவே ஈஸியாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அழகிய காதலனாக விளையாடுவது எனக்கு எப்போதும் எளிதானது.

இது மட்டுமின்றி, அவர் தபுவுக்கு தபாஸ்கோ என்ற செல்லப்பெயரும் வைத்துள்ளார். தபாஸ்கோ தபாஸம்க்காக.. நான் அதை கொண்டு வந்தேன்.. அவர் ஒரு மிர்ச்சி. என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார் இஷான்.

செய்தியாளர் மேலும் அவரிடம் சில கேள்விகள் கேட்டு உள்ளார். அதில் தபுவுக்கு என்ன கிஃப்ட் தர விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, பட்டென சிறிதும் யோசிக்காமல் என்னுடைய இதயம் என்று கூறினார். ஆனால் காலிபின் கவிதை புத்தகத்தை நான் அவருக்கு பரிசளிப்பேன், என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இஷான் கட்டர் நடிகை தபுவைவிட 24 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தபுவுக்கு 48 வயதாகிறது. அவரது வயதில் பாதிக்கு பாதி. இதற்கிடையில், இவர் இப்படி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து இருப்பது தபு ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துள்ளது.