சென்னை மனைவிக்கு வந்த போன் கால்! பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி! திக் திகில் கொலை!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.


கேராளா சேர்ந்தவர் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். இவரக்கு இந்திரா மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹைதராபாத்தில் சுரேஷ் பணியாற்றி வந்துள்ளார். வங்கி ஊழியரான அவரது மனைவி சென்னையில் வசித்து வருகிறார். 

சுரேஷ் நேற்று பணிக்கு செல்லாத நிலையில், அவரது அலுவலக நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் ரெஸ்பான்ஸ் இல்லாதால், அவரது மனைவிடம் விவரத்தை கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சென்னையில் இருந்த அவரது மனைவி இந்திரா தொடர்பு கொண்டபோதும் பதில் இல்லாத்தால் உடனடியாக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். 

இந்நிலையில் சுரேஷின் வீட்டிற்கு சென்ற இந்திரா, போலீஸ் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு விஞ்ஞானி சுரேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

விஞ்ஞானி சுரேஷ் தலையில் கனமான பொருளால் தாக்கிய தடயம் கிடைத்துள்ளது. மேலும் அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்பு தான் விஞ்ஞானி சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என போலீஸ் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.