சேலத்தில் இஸ்லாமியர் போராட்டம் விறுவிறு... அடுத்து சென்னையில்..?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 40 இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


சேலம் கோட்டை மைதானத்தில் கடந்த 24 நாட்களாக ஏராளமான பெண்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டதை யாரும் கண்டுகொள்ளத சூழலில் இன்றுபாய், தலையனை, சமைத்து சாப்பிடும் பாத்திரங்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

ஆனால், போராட்டத்துக்கு தடை விதிக்கப்படவே, கலெக்டர் அலுவலகம் முன்பு அனைவரும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நிலைமை சிக்கலாவதை அடுத்து, அத்தனை பேரையும் போலீஸ் கைது செய்தது.   

தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத வரையில் போராட்டம் ஓயாது என்கிறார்கள். இதே பாணியில், அடுத்து சென்னை, தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்தலாமா என்று ஆலோசனை நடைபெறுகிறதாம்.