சந்திராயன் 2 தோல்வியல்ல... வெற்றிதான்! இஸ்ரோ சிவனுக்கு உலகம் முழுவதும் இருந்து குவியும் பாராட்டு!

சந்திராயன் 2 திட்டம் தோல்வி அடைந்தாலும் அதற்காக இரவுப் பகலாக உழைத்த இஸ்ரோ சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகள் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.


மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களுக்கும் முதலில் தோல்விதான் ஏற்பட்டது என்றும் அவர்கள் ஆறுதல் தெரிவித்து உள்ளார்கள். நாசா அல்லது சீனா விண்வெளி ஆய்வு மையம், முதல் முயற்சிகளில் தோல்வி கண்டது என்றும், நாசா 3 முறை, சீனா 5 முறை தோற்ற பின்தான் நிலவில் தரையிறங்க முடிந்தது என்பதையும் சுட்டிக் காட்டி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.  

நாசா நாசா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நிலவு ஆய்வு முயற்சிகளில் தோல்வியடைந்த வரலாற்றை சொல்கிறார் இந்த நெட்டிசன். ஆனால் இந்த பட்டியல்படி நாசா 10 முறை தோற்கவில்லை, 3 முறை தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல முயற்சி செய்தும் இறுதி நிலையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டதாக கூறும் நெட்டிசன்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா இறுதிக் கட்டத்தில் வாய்ப்பை தவற விட்டதையும், இஸ்ரோ லேண்டர் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்ததையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர. 

விக்ரம் லேண்டர்தான் தொடர்பை இழந்துள்ளதே தவிர, சந்திரயான் 2 ஆர்பிட்டர், பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. ஆர்பிட்டர் இன்னும் ஓராண்டுக்கு ஆய்வை மேற்கொள்ளும் என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மிக குறைந்த செலவில், இந்திய விஞ்ஞானிகள் செய்த இந்த சாதனையை அவர்கள் போற்றி புகழ்கிறார்கள். எனவே இது 95 சதவீத வெற்றிதான்.