இஷாந்த் சர்மா , ரோஹித் அணியில் இருந்து நீக்கம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை (Jan 3) சிட்னியில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்குண்டான 13 பேர் கொண்ட அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


        சிட்னி மைதானம் சுழற் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 13 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.கடைசி இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக இடம் பெறாத அஸ்வின் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். எனினும் நாளை காலை நடைபெறும் உடல் தகுதி தேர்விலிருந்தே அவர் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என தெரிய வரும்.

      காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இஷாந்த் சர்மா இந்த போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுஇருந்தது

    மூன்றாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட லோகேஷ் ராகுல் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். எனவே இவர் தொடக்கவீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனுமன் விஹாரி மிடில் ஆர்டரில் இறக்கப்படலாம் என தெரிகிறது

     இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் , மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 


13 பேர் கொண்ட அணி பட்டியல்:

கோஹ்லி,ரஹானே , ராகுல் , அகர்வால் , புஜாரா , விஹாரி , ரிஷாப் பாண்ட் , ஜடேஜா , குல்தீப் யாதவ் , அஸ்வின் , ஷமி , பும்ரா , உமேஷ் யாதவ்