திருச்சியில் தொடங்கிய வேளாண் காடுகள் பயணம்..! ஈசாவின் விவசாயப் புரட்சி

வேளாண் காடு வளர்ப்பு குறித்து அறிய விவசாயிகள் ஆர்வம் ஈஷாவின் களப் பயணத்தில் பல மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு.


ஈஷா ஏற்பாடு செய்த வேளாண் காடு வளர்ப்பு குறித்த களப் பயணத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 102 விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற்றனர்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் வேளாண் காடு வளர்ப்பு முறை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதனால், இம்முறையை தமிழக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ஈஷா வேளாண் காடுகள் திட்டம் சார்பில் திருச்சியில் ஒரு நாள் களப் பயணம் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது.