கிராமப்புற குழந்தைகளின் கல்விக்காக ஈஷா பிரம்மச்சாரிகள் எடுத்த நெகிழ வைக்கும் முயற்சி! குவியும் பாராட்டு!

கிராமப்புற குழந்தைகளின் கல்விக்காக விழிப்புணர்வு மாரத்தான் 15 பிரம்மச்சாரிகள் உட்பட 300 ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு.


கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி அளித்து வரும் ஈஷா வித்யா பள்ளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் இன்று (ஜனவரி 5) நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 15 பிரம்மச்சாரிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

ஈஷா கல்வி அறக்கட்டளை சார்பில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், விழுப்புரம், கடலூர், தர்மபுரி, நாகர்கோவில், தூத்துக்குடி, சித்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஈஷா வித்யா மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இதில் 8,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முழு இலவச கல்வி பெறுகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இப்பள்ளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை ரன்னர்ஸ் அமைப்பு இன்று நடத்திய மாரத்தான் ஓட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 15 ஈஷா பிரம்மச்சாரிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஈஷா தன்னார்வலர்கள் அனைவரும் ஈஷா வித்யா பள்ளியில் டி-சர்ட் அணிந்து கொண்டு ஓடினர். 42 கி.மீ, 32 கி.மீ, 21 கி.மீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த ஓட்டம் நடைபெற்றது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மையத்தில் தொடங்கிய 42 கி.மீ மாரத்தான் ஓட்டம் ஈ.சி.ஆரில் உள்ள வி.ஜி.பி. கோல்டன் ரிசார்ட்டில் நிறைவு பெற்றது.

ஊடக தொடர்புக்கு: 90435 97080, 63831 25184