96 பட இசை அமைப்பாளர் ஆண்மை அற்றவர்! வரம்பு மீறிய இசை ஞானி!

சமீபத்தில் சூப்பர் ஹிட்டடித்த 96 படத்தின் இசையமைப்பாளருக்கு ஆண்மை இல்லை என்று இளையராஜா பேசியிருப்பது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இசை ஞானியின் வாயில் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று இசைக் கலைஞர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.


96 திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தியது குறித்து இளையராஜாவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘ஆண்மையற்றவர்கள்தான் இப்படி வேறு ஒருவரது இசையை எடுத்து பயன்படுத்துவார்கள். முன்பு யாதோங்கி பாரத் என்ற இந்தி படம் வந்தது. 20 வருடங்களுக்கு முந்தைய ஒரு பாடல் தேவைப்பட்ட போது, ஆர்.டி.பர்மனே ஒரு பாடல் இசைத்து, அதையே இடம் பெறச் செய்தார். 

அப்படி, சொந்தமாக இசையமைத்து ஒரு பாடலை போடத் தெரியாதவர்கள், ஆண்மையற்றவர்கள்தான் இப்படி பழைய ஹிட் பாடல்களைப் பயன்படுத்தி பெயர் வாங்குவார்கள் என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார் இளையராஜா.

ஆண்மையைப் பத்தி யாரெல்லாம் பேசுறாங்க பாருங்க.