சுதீஷை ஆசிர்வாதம் செய்தாரா விஜய்காந்த்..! நினைவுத் திறன் மீண்டும் குறைபாடா..?

ஒரு காலத்தில் சிங்கம் போன்று களத்தில் இறங்கி கர்ஜித்த விஜய்காந்த், இப்போது உட்கார்ந்த இடத்திலேயே உட்காரும் நிலைக்கு ஆளாகியுள்ளார். அவரது குரல் போய்விட்டது. அவ்வப்போது, மீண்டும் பழையபடி வருவேன் என்று சொல்கிறார்.


விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருப்பது போல் தெரிந்தாலும், நினைவுத்திறன் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். யாரைப் பார்த்தாலும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தடுமாறுகிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், வீட்டுக்குள்ளும் கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறாராம்.

இந்த நிலையில், தே.மு.தி.க. கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ், .பூர்ணஜோதி சுதீஷ் ஆகியோரின் 23ம் ஆண்டு திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த்தையும், கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் சாலிக்கிராமம் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசிபெற்றாராம்.

சுதீஷை ஆசிர்வாதம் செய்வது சரிதான். ஆனால், எம்.பி. சீட் கேட்டு அனுப்பியதுதான் தவறு. எடப்பாடி திட்டி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். நிஜம்தானா அது.?