மருத்துவமனையில் எதிர்கொண்ட உயிர் பயம்! பக்திமானாக மாறிய வைகோ! திராவிட சித்தாந்தத்திற்கே பின்னடைவு!

பெரியார், அண்ணா கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்று வைகோவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஏனென்றால் பகுத்தறிவு விஷயம் குறித்து பேசுவது மட்டுமின்றி நடைமுறையிலும் அப்படியே வாழ்ந்துவந்தார்.


ஆனால், அவரது அரசியல் குளறுபடி போலவே ஆன்மிகவும் குளறுபடியாகிவிட்டது. சமீபத்தில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்குப் போய் வந்தபிறகு ஆளே மாறிவிட்டார் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பது போலத்தான் பேசிவருகிறார் வைகோ.

இன்று 99% மக்கள் கோயிலுக்குப் போகிறார்கள். அதனால் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுபவர்களை திருத்த வேண்டாம். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நானே ஒரு பிள்ளையார் கோயில் கட்டிக் கொடுத்திருக்கிறேன் என்று பேசுகிறார் வைகோ.

அச்சோ, நம்ம வைகோவுக்கு புத்தி பிசகிடுச்சா... ஒரு கொள்கையில்கூட உறுதியா இருக்க மாடேங்கிறாரே என்று அலறுகிறார்கள் ம.தி.மு.க.வினர். அதோடு மட்டும் அல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உயிர் பயத்தில் கடவுளை கும்பிட்டு தான் வைகோ தன்னை தேற்றிக் கொண்டதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில்திடீரென கேரளா புறப்பட்டுள்ள வைகோ அங்கு முக்கியமான கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக கூறுகிறார்கள். வைகோ போன்ற ஒருவர் கடவுள் மறுப்பு கொள்கையில்இருந்து பின்வாங்குவது தமிழகத்தின் திராவிட சித்தாந்தத்திற்கே பெரும் பின்னடைவு தான்.