மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..? கொந்தளிக்கும் ஸ்டாலின்!

நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று புகழப்பட்ட சந்தோஷ் பாபு, திடீரென விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்து இருப்பதன் பின்னணியில் அமைச்சர் உதயகுமார் இருக்கிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.


இதுகுறித்து ஸ்டாலின் காரசாரமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, திடீரென்று விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 

இவரின் கீழ்தான், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2,441 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. அதன் பொறுப்பிலிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி விடுப்பில் செல்வது, பொதுமக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  

நேர்மையாகப் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமே இல்லை என்ற அவல நிலையையும் உருவாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், “பாரத் நெட், தமிழ்நெட் செயலாக்கம் குறித்த பணிகள் விவகாரத்தில் நடக்கும் திரைமறைவு ரகசியங்களும், மர்மங்களும் என்ன? இதற்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பதில் சொல்வாரா முதல்வர் பழனிசாமி?