இரட்டைக் கொலை செய்த அதே எஸ்.ஐ.யின் கைவரிசையா?. ஆபத்தான நிலையில் விசாரணை கைதி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பனைகுளத்தினை சேர்ந்தவர் ராஜாசிங் என்பவர், கடந்த மாதம் 21ந்தேதி கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேராவூரணி சிறையிலும், பின்னர் நெல்லை பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டார்.


இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து சிறைகாவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கும் புட்டம் பகுதியில் கடுமையான ரத்தக்கசிவு இருக்கவே, ஏனென்று விசாரணை நடத்தப்பட்டது.

அப்போதுதான், இவரது நிலைக்கும் தூத்துக்குடி, சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் தொடர்புடைய சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், இவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில்தான் விசாரணை செய்திருக்கிறார்.

மலத்துவாரத்தில் ரத்தக்கசிவு காரணமாக அட்மிட் செய்யப்பட்டு இருந்தாலும், நெஞ்சுவலி என்று வெளியே சொல்லப்படுகிறதாம். கொடூர எஸ்.ஐ.களிடம் இருந்து எப்போது மக்களுக்கு விடிவு வருமோ.