அடப்பாவமே! வேலூரை மூணா பிரிச்சதுக்கு உண்மையான காரணம் இதுதானா? எடப்பாடி லீலைகள் பலே பலே!

.வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்ததன் உண்மையான காரணம் இதுதான்.


கடந்த ஆகஸ்ட் 15அன்று கோட்டையில் கொடியேற்றிய பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின உரையாற்றினார்.அதில் அவர் அறிவித்த முக்கியமான செய்திகளில் ஒன்று தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூரை பிரித்து திருப்பத்தூர்,மற்றும் ராணிப்பேட்டையை தலை நகராக கொண்ட இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாகின்றன என்பதுதான்.

இதற்கு வழக்கம்போல நிர்வாக வசதிக்காக பிரிப்பதாகத்தான் காரணம் சொல்லப்பட்டது.ஆனால்,அதில் ஒரு உள் குத்து இருந்தது இப்போது தெரியவந்து இருக்கிறது. நிர்வாக வசதி என எடப்பாடியார் சொன்னது அரசு நிர்வாகமல்ல ,கட்சி நிர்வாக வசதிக்குத்தான் என்பது இப்போது கன்ஃபார்ம் ஆகி இருக்கிறது.

அதிமுகவின் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் அமைச்சர் வீரமணி,அவருக்கும் மாவட்டத்தின்  இன்னொரு அமைச்சரான நீலோஃபர் கபிலுக்குமான மோதலால்தான் வேலூரில் அதிமுக தோற்றது என தலைமை நம்புகிறதாம். இதனால் வீரமணியின் அமைச்சர் பதவியை பறித்து விடும் முடிவுக்குத்தான் முதலில் வந்திருக்கிறார் எடப்பாடி.

ஆனால் அவரது நம்பிக்கைக்கு உரிய மணிகள் சொன்ன மாற்று திட்டம்தான் இதுவாம்.அதன்படி தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அமைச்சர் வீரமணியின் பவர் மூன்றில் ஒன்றாக குறைக்கப் பட்டு விட்டதாம்.ஆனால் அதிலும் ஒரு புதுச்சிக்கல் கிளம்பி இருக்கிறதாம்.

இப்போது வீரமணி அவர் தொகுதி இருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மட்டுமே செயலாளர் என்பதால் வேலூர் மா.செ.பதவிக்கு முன்னாள் அமைச்சரான டாக்டர் கடுமையாக முயற்சிக்கிறார். தினகரனிடம் போய்விட்டு திரும்பி வந்த ஒருபரும் டாக்டருக்கு டஃப்  ஃபைட் கொடுக்றாராம். ராணிப்பேட்டையில் கதையே வேறாம்.

மாவட்டச் செயலாளர் பதவியை சிறுபான்மையினருக்கே ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கை அங்கே வலுப்பதால் குழம்பிப்போன எடப்பாடி இப்போதைக்கு அமெரிக்க பயணத்தை காரணம் காட்டி தப்பித்து வருகிறாராம்.