விஜயகாந்த் உடல் நன்றாக இருக்கிறார், தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என்று உறுதிமொழி கொடுத்துத்தான் கூட்டணியில் தே.மு.தி.க. ஐக்கியமானது.
கேப்டன் டிவி வெளியிட்ட வீடியோவில் விஜயகாந்த்துக்கு மிமிக்ரி வாய்ஸ்! டென்ஷன் கிளப்பும் அ.தி.மு.க.

ஆனால், இதுவரை பிரேமலதா மட்டும்தான் மாங்குமாங்கென்று சுத்திக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்த் எப்போது வெளியே வருவார் என்று கேட்டபோதெல்லாம், இதோ அதோ என்று சாக்கு சொல்லிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில்தான் திடீரென விஜயகாந்த் பேசுவதுபோன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மோடிக்கு ஓட்டு போட வேண்டும், அ.தி.மு.க. அரசு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லி ஓட்டு கேட்கிறார் விஜயகாந்த்.
அமெரிக்காவில் இருந்தபோது நன்றாகப் பேசிய விஜயகாந்த் இங்கு வந்தபிறகு யாரிடமும் பேசவில்லை. சென்னை ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் பேசும்படி குரல் எழுப்பியபோதும், தொண்டை சரியில்லை என்று சைகையால்தான் பேசினார். ஆனால், இப்போது திடீரென விஜயகாந்த் பேசியதாக வெளிவந்திருக்கும் வீடியோ தே.மு.தி.க.வினரிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அத வேளையில், அ.தி.மு.க.வினரிடம் கோபத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், விஜயகாந்துக்கு இன்னமும் பேச்சு வரவில்லை, அதனால் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பதாக அ.தி.மு.க புகார் சொல்கிறது. இந்த வீடியோ எடுபட்டால், இதேபோன்று நிறைய வீடியோ வெளியிட்டு பிரசாரம் செய்ய நினைக்கிறாராம் பிரேமலதா. அந்த பஞ்சாயத்தெல்லாம் வேண்டாம், விஜயகாந்தை எப்படியாவது இழுத்துட்டு வந்து நிறுத்துங்க என்று கட்டளை போடுகிறதாம், ஆளும் தரப்பு.
பார்த்துப்பா, விஜயகாந்தைப் பத்தி தப்பா பேசுனா என்னவெல்லாமோ நடக்கும்னு குட்டி கேப்டன் மிரட்டியிருக்காரு.