முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

முதல் பிரசவம் சிசேரியன் மூலம் நடந்துவிட்டால், கண்டிப்பாக அடுத்த பிரசவமும் அப்படித்தான் நிகழும் என்று பெரும்பாலோர் கருதுகிறார்கள். எல்லா நேரங்களிலும் முழுமையாக அப்படித்தான் நிகழும் என்று சொல்ல முடியாது. சிசேரியனுக்குப் பிறகு இரண்டாம் பிரசவம் சுகப்பிரசவமாக நிகழவும் வாய்ப்பு உண்டு.


கர்ப்பப்பையின் கீழ்ப்பக்கம் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை எடுக்கப்பட்டிருந்தால், இரண்டாவது சுகப்பிரசவம் எதிர்பார்க்கலாம்இடுப்பெலும்பு  குழந்தை பெற்றுக்கொள்ளும்  அளவுக்கு வசதியாக இருக்கும் பட்சத்தில் சுகப்பிரசவம் அமையலாம்.

குழந்தையின் பொசிஷன் மாறி இருந்த காரணத்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட்டது என்றாலும் இரண்டாவது சுகப்பிரசவமாக அமைய வாய்ப்பு உண்டு.எந்தக் காரணம் கொண்டும் வயிற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை இருந்தால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லை.

இதுகுறித்து மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசனை செய்து, சுகப்பிரசவத்திற்கு ஏற்ற நடைமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் முதல் குழந்தையை சிசேரியனாக பெற்றவர்கள், பொதுவாகவே இரண்டாவது குழந்தையையும் அப்படி பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள்.