புதைக்கப்பட்டது குழந்தை சுஜித் உடல்தானா? கேள்வி கேட்கும் மனிதாபிமானம்!

நான்கு நாட்களாக தமிழகத்தை பதைபதைக்க வைத்த சுஜித் உடல் புதைக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் உலா வருகின்றன.


நள்ளிரவில் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது சுஜித் உடல் இல்லை, அங்கே புதைக்கப்பட்டது தமிழர்களின் இயலாமை என்று பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.

ஏனென்றால், குழந்தை சுஜித் விலசன் உடலின் ஒரு பகுதி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக செய்தி பரவுகிறது. குழந்தை மீட்பு குறித்து 24 மணி நேரமும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நடத்தப்பட்டது. ஆனால், உடலை மீட்கும் நேரத்தில் மட்டும் ஒளிபரப்பு காட்டப்படவில்லை.

 அதனால் குழந்தை இறப்பு குறித்து அரசு சொல்வதை அப்படியே நம்பவேண்டிய கட்டாயத்துக்கு தமிழகம் ஆளாகியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது என்று சொல்லப்பட்ட பிறகு மீட்பு பணிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது. இரவு நேரத்தில் சட்டென குழந்தை விழுந்த குழியில் இருந்து மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் குழந்தையை யாரும் பார்க்கவில்லை. துர்நாற்றம் வீசும் உடலை பார்க்க மற்றவர்கள் மறுக்கலாம், ஆனால், பெற்றவர்களுக்கு காட்ட வேண்டியது அவசியம் இல்லையா? ஏன் புதைக்கப்பட்டது, எப்போது இறந்ததாக போஸ்ட்மார்ட்டம் தெரிவிக்கிறது போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்போம். சுபஸ்ரீ, சுஜித் போன்று வேறு ஒரு மரணம் நிகழும் வரையிலும்.