பாடகி சுதா ரகுநாதன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்? மகள் கல்யாண சர்ச்சை!

காதலுக்காக மதம் மாறுவது பழைய ஸ்டைல். இப்போது மகளின் காதலுக்காக பாடகி சுதா ரகுநாதன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார் என்பதுதான் புதுசு.


பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனுக்கு தமிழ் மக்களிடம் எந்த அறிமுகமும் தேவையில்லை. அமெரிக்காவில் படித்துவரும் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா, மைக்கேல் என்ற அமெரிக்க கருப்பரை காதல் செய்கிறாராம். பெற்றோரை அமெரிக்காவுக்கு அழைத்திருக்கும் மாளவிகா, அங்கே கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், தேவையில்லாத வீண் சர்ச்சை ஆகிவிடும் என்று பயந்த சுதா ரகுநாதன், முதலில் மைக்கேலை தமிழ்நாட்டுக்குக் கூட்டி வா. இந்து முறைப்படி கல்யாணம் செய்துகொள்ளலாம். அதன்பிறகு அமெரிக்காவில் கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் செய்துகொள்ளலாம். நீ இதற்கு சம்மதம் சொன்னால், நான் அமெரிக்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்கிறேன் என்றாராம்.

ஆக, மாப்பிள்ளையை இந்து மதத்திற்கு மதம் மாற்றும் சுதா ரகுநாதன், அமெரிக்கா செல்லும்போது மாப்பிள்ளைக்காக கிறிஸ்துவராக மாறிக்கொள்வாராம். அதுசரி, அவங்க சொந்த விஷயம் நமக்கெதுக்கு?