அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்த நடுங்குகிறாரா ஸ்டாலின்..? கையெழுத்து இயக்கம் கண் துடைப்பு?

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஸ்டாலின் தீவிரமாக மீண்டும் போராட்டம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைதிப் புயலாக மாறி, கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


தேசிய மக்கள் தொகைப்பதிவேடு, குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகின்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக, விசிக, இடதுசாரிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். 

மாநிலம் தழுவிய போராட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மத்திய அரசை வலியுறுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், இறுதியில் மாநிலம் தழுவிய அளவில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏன் ஸ்டாலின் போராட்டம் நடத்த பயந்துவிட்டார் என்று தி.மு.க.வினரே கேள்வி கேட்கிறார்கள்.

யார் என்ன போராட்டம் நடத்தினாலும் சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியாகத் தெரிவித்துவிட்டார். அதனால், வீணாக போராட்டம் நடத்தி பிரயோஜனமில்லை. அதனால், எதிர்ப்பைக் காட்ட வேண்டும், ஆனால் போராடக்கூடாது என்று முடிவு செய்தாராம் ஸ்டாலின்.

அதனால்தான் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறதாம். ஏனுங்க இந்த கொசு பிடிக்கும் போராட்டம், குரங்கு விரட்டும் போராட்டமெல்லாம் நடத்த மாட்டீங்களா?