நந்தா சூர்யா தங்கச்சியா இது? ஆந்திர தொழில் அதிபருடன் செட்டில்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக நடித்த நடிகை ஷீலாவின் திருமண புகைப்படங்களை தற்போது அவர்களின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


கடந்த 2001 ஆம் ஆண்டு பாலா இயக்கி திரைக்கு வந்த நந்தா திரைப்படத்தில் சூர்யாவிற்கு தங்கையாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஷீலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய முன்னணி நடிகர்களின் தங்கையாக நடித்துள்ளார். அதில் முக்கியமாக தமிழில் தளபதி விஜய்யின் பூவே உனக்காக, அஜித்தின் தீனா போன்ற முன்னணி நட்சத்திரங்களில் படங்களில் நடித்துள்ளார்.


இவருக்கு சில தினங்களுக்கு முன் திரு. சந்தோஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனை அவர்கள் சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.