லாபம் தருமா எஸ்.பி.ஐ.கார்டு ஐ.பி.ஓ. முதலீடு..? பங்குசந்தை முதலீட்டுக்கு பக்கா ஆலோசனை

எஸ்பிஐ கார்டு ஐபிஓவில் முதலீடு செய்யலாமா வேண்டாமா? பங்குச் சந்தை முதலீடுகளில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க என்ன வித உத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது இந்த பகுதி.


எஸ்பிஐ கார்டுகள் ஐபிஓ திட்டத்திற்கான விற்பனை வரும் மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி, மூன்று நாட்கள் நடைபெறும் பங்குச் சந்தைக்கு முந்தைய இந்த விற்பனையில். சில்லறை முதலீட்டாளர்களுக்கு உகந்தது எனவும் கடந்த சில மாதங்களாக சரியான வாய்ப்பில்லாமல் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு சரியான தீனியாக வரவுள்ளது இந்த பங்குகள் விற்பனை.

மேலும் பங்குச் சந்தையில் முதலீடு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். ஆனால், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் நிதி நிலை, ஐபிஓ மூலம் உருவாகும் நிறுவனத்தின் போக்குகள் மற்றும் பங்குச் சந்தை நிபுணர்களின் கருத்துக்களை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

அதன்படி. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ். வருகின்ற மார்ச் 2-ம் தேதி பங்குச்சந்தையில் களமிறங்க உள்ளது.

முதற்கட்டமாக 9000 கோடி மதிப்பிலான பங்குகளை ஆரம்ப பொது சலுகை மூலமாக விற்பனை செய்ய உள்ளதாகவும். இந்த ஆரம்ப பொது சலுகை விற்பனையானது மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட பங்குகள் விலை குறைந்தபட்சம் 750 ரூபாய் எனவும், அதிகபட்சம் 755 ரூபாய் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஓவில் 19 பங்குகள் சேர்ந்தது ஒரு லாட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு பங்குகள் விலையில் 75 ரூபாய் சலுகை அளிக்கப்படுகிறது.

இந்த பங்குகள் விற்பனையின் மூலம் திரட்டப்படும் மூலதனத்தை எஸ்பிஐ வங்கிக்கு 76 சதவீதமும்.மீதமுள்ள 26 சதவிகித பங்குகள் அமெரிக்காவைச் சேர்ந்த கார்லைல் ஆசியா பார்ட்னர்ஸ் நிறுவனம் நிர்வகிக்க உள்ளன.

சென்ற 2018-19 நிதியாண்டை ஒப்பிடுகையில். நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் லாபம் 78 சதவீதம் அதிகரித்து 1,034 கோடி ரூபாயாக உள்ளது.

 எஸ்பிஐ கார்டின் ஆரம்ப பொது சலுகை பங்குகள் நீண்ட கால முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி, உஜ்ஜீவன் மற்றும் சி.எஸ்.பி வங்கியின் ஐபிஓக்கள் புதிதாக தொடங்கப்பட்ட பங்குச்சந்தையில் சிறப்பான லாபங்களை கொடுத்தது போல் இந்த பங்குகளும் அதிகப்படியான லாபத்தினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு சேவைகளைப் பொறுத்தவரை, எச்.டி.எஃப்.சி வங்கிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது எஸ்பிஐ கார்டுகள். இந்த நிறுவனத்தின் சார்பில் சுமார் 1 கோடி கடன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது, இதன் மூலம் கடந்த 2019 டிசம்பர் வரை சுமார் 98500 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும. இதன் காரணமாக எஸ்பிஐ கார்டு சுமார் 18% சந்தை பங்கு மதிப்பை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில மாதங்களாகவே சில்லறை முதலீட்டாளர்களுக்குச் சரியான முதலீட்டு வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கிறார்கள். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனத்தின் ஆரம்ப பொது சலுகை பங்குகள் விற்பனையை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இந்த நிறுவனம் சுமார் 9000 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு மதிப்பிடப்பட்டுள்ளதால். சில்லறை மற்றும் கார்பரேட் முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை உருவாக்கித் தரும் என தெரிவிக்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.

மணியன் கலியமூர்த்தி