அரைவேக்காடு ரஜினியை திட்டினாரா பெரியார் வேடத்தில் நடித்த சத்யராஜ்..?

தமிழ், தமிழன் என்ற உணர்வு இருப்பதாக எப்போதாவது காட்டிக்கொள்பவர் நடிகர் சத்யராஜ்.


 பெரியார் வேட்டத்தில் காசு வாங்கிக்கொள்ளாமல் நடித்தவர். பெரியார் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் சத்யராஜ், ரஜினி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார் என்று உலா வரும் பதிவு இது.

கேள்வி : உச்ச நட்சத்திரமான...

சத்யராஜ் பதில் : நிறுத்து...யோவ் அவன் அரை வேக்காடு, தமிழ் திரை உலகில் நான் தான்யா ஒசந்த நடிகன்....என்னை விட ஒசந்தவன் எவன்யா இருக்கான்?

கேள்வி : நடிகர் ரஜினி தந்தை பெரியாரை பற்றி கூறிய.....

பதில் : யோவ் முதல நீ சுமக்கும் அரை வேக்காடு என்ற பட்டத்தை அந்தாளுக்கு கொடுயா! திரு ரஜினி அவர்களே....உனக்கு என் மண்ணை பற்றி தெரியாது....என் மக்களை பற்றி தெரியாது....என் மக்களுக்காக உழைத்து அவர்களை மானமுடன் வாழ செய்த தலைவர்களை பற்றி தெரியாது.....அதுவும் எங்க ஐயா பெரியாரை பற்றி தெரியவே தெரியாது உண்மை இப்படி இருக்க எதுக்காக தேவை இல்லாம வேலியில போற ஒணானை வேஷ்டிக்குள் இழுத்து விடுற?

யோவ் கடவுளும் பெரியாரும் என்ன ஒன்னு விட்ட அண்ணன் தம்பியா....அவங்க ரெண்டு பேரும் கீரியும் பாம்பும் தான் என்று உலகத்துக்கே தெரியும்...கடவுளின் பெயரால் எம்மக்கள் அடைந்த இழிநிலை கண்டு கடவுளோடு மல்லு கட்டினார்.....வரிந்து கட்டினார்....நீ எதுக்குடா இப்ப கோவணம் கட்டியவனுக்காக வரிந்து கட்டுகிறாய்?

ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்ததை பேசுவது தப்பில்லை....ஆனால் ஏன் அப்படி நடந்தது என்பதையும் அறிந்து கொண்டு பேசுடா.....ஐம்பது வருடங்களுக்கு முன் எம்ஜிஆர் உன்னை ராமாவரம் தோட்டத்தில் வைத்து எதுக்காக பெல்ட்டால ரவுண்டு கட்டி அடித்தார் நீ ஏன் பைத்தியகார வேசம் போட்டாய் என்பதை அதே மேடையில் பேசலாமே.

கோவிலில் உடைந்த சிதறு காய் பொறுக்கும் அமாவாசை அல்ல திராவிடன்.. அமாவாசையை பவுர்ணமியாக்கும் வித்தை தெரிந்தவன்....இந்திய விடுதலைக்கும் வித்திட்டவன் இந்த திராவிடன். உன்னால் பேருந்தில் விசிலடிக்க மட்டுமே முடியும்.....ஆனால் அந்த பேருந்தை அரசுடமையாக்கி மக்கள் சொத்தாக்க எங்களால் மட்டுமே முடியும். பெரியாரின் கைத்தடி இன்னும் வீரியத்துடன் தான் உள்ளது என்பதை மறந்து விடாதே! என்னப்பா அரை வேக்காடு இது போதுமா?

கேள்வி : அண்ணே இறுதியாக மக்களூக்காக ஏதாவது சொல்லுங்கணே!

பதில் : அட....அந்த கருமத்தை எத்தன வாட்டிதாம்பா சொல்றது....இருந்தாலும் நீ கேட்டதுக்காக சொல்றேன். நடிகனை நடிகனாக மட்டும் பார்.....தலைவனாக பார்க்காதே....நீ தான் அவனுக்கு எஜமான்....மன்னன் எல்லாமே!

இப்படி சத்யராஜ் பேசியதாக உலவுகிறது என்றாலும் உண்மையாகத் தெரியவில்லை. ஏனென்றால் சத்யராஜ் திறமையான நடிகர். அதாவது சிக்கலான நேரங்களில் வாயைத் திறக்கவே மாட்டார்.