ராமதாஸ் வன்னியர்தானா..? அவரை இனியும் நம்பலாமா? யாருப்பா இப்படி கேட்குறது..?

சமீபத்தில் வலைதளங்களில் படு வைரலான விவகாரம் என்றால், அன்புமணி தன்னுடைய புஜத்தில் அக்னி கலசம் டாட்டூவை காட்டியதுதான்.


ஒரு எம்.பி.யாக இருப்பவர் இப்படி ஜாதியை தூக்கிப்பிடிக்கலாமா என்று தி.மு.க.வின் எம்.பி. செந்தில்குமார் கேள்வி கேட்கவே கடும் எதிர்வினை செய்யப்பட்டது. அவர் மீது பல்வேறு ஸ்டேஷன்களில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வரும் விவகாரம் இதுதான். அதாவது ராமதாஸ் வன்னியரா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். 

ராமதாஸ் வன்னியரா? இந்த, விடுகதைக்கு, விடை தருபவர்கள், யார்? கையில் "அக்கினிகுண்டம்" வரைந்துகொண்டதால், அன்னியனெல்லாம்,வன்னியனாக முடியுமா?  ஷத்திரியனா இல்லாதவனெல்லாம், ஷத்திரியனா நடிக்கலாமா? சுக்கு-மிளகா-பூண்டு-பருப்பு- அறிக்கைகளும், கட்டுரைகளும், வன்னியனை முட்டாளாக்கும், ராமதாஸின்,மூலதனம். தண்ணிர் கேட்டு, தெருவில் நின்றவன்,ஜாதிக்கு தலைவனானான். தரமறியாமல்,தரமற்றவர்களை, வன்னியர்களுக்கு, தலைவராக்கிய, நம் மூத்த தலைவர்களும் குற்றவாளிகளே.

தியாகத்தலைவர்கள் மத்தியில், கருப்பு ஆடுகளாக புகுந்தவர்கள், வன்னிய தலைவர்களா? இனத்துக்கே, சொந்தமில்லாதவர்களெல்லாம், இனமான காவலர்களா? நீதிக்கு, அர்த்தம் தெரியாதவர்களெல்லாம், சமூக நீதி காவலர்களா? ஈழத்தமிழர்களை பற்றி, தெறியாதவர்களெல்லாம், ஈழ போராளிகளா? இட ஒதுக்கீட்டுக்கு,குறுக்கீடு செய்பவர்களெல்லாம், இட ஒதுக்கீட்டு நாயகர்களா?

சத்தியம் செய்து, தாயயை களங்கப்படுத்தியவர்களெல்லாம்,சத்தியவான்களா? பணம் பதவிக்காக,வன்னியர்களை, அடகுவைத்தவர்களெல்லாம், வன்னிய குல ஷத்திரியர்களா? வன்னிய, தலைவர்களையெல்லாம், அடியாட்களைக்கொண்டு, கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களெல்லாம், தியாக தலைவர்களா? வன்னியர்களின் நிதியில், அமைக்கப்பட்ட, வன்னியர் அறக்கட்டளையை, தன் குடும்ப அறக்கட்டளையாக, மாற்றியவர்களெல்லாம்,அறங்காக்கும் காவலர்களா?

வன்னியர் சங்க தலைவர், காடுவெட்டி "குரு"வை,தூண்டிவிட்டு, காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாக்கி, உடல் நலம் குன்றி, அவரின் இறப்புக்கு காரணமானவர்களெல்லாம், வன்னியரின் பாதுகாவலர்களா? 

கலப்பு திருமணத்துக்கும், நாடக காதலக்கும்,அச்சாரம் போட்டவர்களெல்லாம், கலாச்சாரம்காப்பவர்களா? இட ஒதுக்கீட்டு தியாகிகளின், கல்லரை மேல், மாட மாளிகையில், ராஜவாழ்க்கை வாழ்பவர்களெல்லாம், மனிதர்களா? ராமதாஸை நம்பிய, வன்னியனே❗ இனியும் நீ, தூங்கினால், உன் தூக்கம் கல்லரை வரை தொடரும்.

இப்படியொரு பதிவு உலாவரும் நேரத்தில், பா.ம.க.வினர் இதுவரை எவ்வித பதிலும் தரவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இதை தி.மு.க.வினர்தான் உலாவிடுகின்றனர் என்று டென்ஷனில் இருக்கிறார்களாம் ராமதாஸ் ஆட்கள். ஆமா, உண்மையிலே புஜத்தில் டாட்டூ குத்துவது சரிதானா..? சொல்லுங்க டாக்டர் சொல்லுங்க.