ராமதாஸ் பணம் வாங்கிக்கொண்டு போராட்டத்தை கை விட்டாரா? டம்மி போராட்டம் ரெடி.

ஆளும் அ.தி.மு.க. அரசுடனுடம் பா.ஜ.க.வுடனும் கூட்டணி தர்மத்துக்காகவே ஒன்றாக இருக்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டிவரும் ராமதாஸ், 5ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு எதிரான போராட்டதைக் கைவிட்டதற்கு பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக அரசு அறிவித்ததும் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பா.ம.க. ராமதாஸும், ‘இந்த தேர்வை நிறுத்தக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெறும்’ என்று வீராவேசமாக அறிவித்தார்.

இந்த நிலையில் திடீரென அந்தப் போராட்டத்தை கைவிட்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராட இருக்கிறாராம். அப்படி என்றால் 5ம் வகுப்புக்கு தேர்வு வைக்க மாட்டோம் என்று அரசு சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லையாம். அதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்துவிட்டதாம்.

அப்படியா என்று ஆளும் கட்சியில் கேட்டால், ‘அதெல்லாம் இல்லை. இந்த ஆண்டுக்கு தேர்வு தேதி அறிவித்தாகிவிட்டது. இதில் பின்வாங்குவதற்கு இடமெ இல்லை. ஆனால், எங்கள் மேலிடத்தில் பேசி, வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு போராட்டத்தை கைவிட்டுவிட்டார் ராமதாஸ். அதில் அவர் கில்லாடி’ என்று சொல்கிறார்கள்.

மத்திய அரசும் ஏதாச்சும் கொடுத்தா பா.ம.க. போராட்டத்தை வாபஸ் வாங்குமாம் பாட்டாளி மக்கள் கட்சி. அப்படி இல்லை என்றால் ராமதாஸ் கடுமையாகப் போராடுவாராம். அய்யோ, பயமா இருக்கே...