மோடியை சந்திப்பாரா ரஜினி..? புதிய ட்வீட் வேதனையில் பா.ஜ.க.வினர்!

தான் சொன்ன கருத்தில் ரஜினி எப்போதும் உறுதியாக இருப்பவர் இல்லை என்பது உலகிற்கே தெரிந்த விஷயம்தான். அதனால், இப்போது ரஜினி போட்டிருக்கும் புதிய ட்வீட் பா.ஜ.க.வினரை அலற வைத்திருக்கிறது.


ரஜினி போட்டிருக்கும் புதிய் ட்வீட் இதுதான். இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டை பார்த்து பா.ஜ.க.வினர் வேதனை அடைந்துவிட்டனர். இப்படி யார் என்ன சொன்னாலும் கேட்டு, அவர்களுக்கு ஆதரவாக ட்வீட் போடுகிறாரே என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இஸ்லாமியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நல்ல பதில் வாங்கிவாருங்கள் என்று ஜமா அத்துல் உலமா சபையினர் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். அதுதான் ரஜினிக்கு யோசனையாக இருக்கிறது.

அடுத்து தன்னை சந்தித்த பா.ஜ.க. பிரமுகரிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டாராம். ‘பேசாம சினிமாவுல நடிக்கிறதைப் பாருங்க. மோடியை பார்த்துப் பேசுனா அம்புட்டுத்தான்’ என்று மிரட்டிவிட்டாராம்.

அதனால், சினிமாவிலாவது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ரஜினி போராடுவார் என்று எதிர்பார்க்கலாம்.