அடப்பாவமே, ஆர்.சுந்தர்ராஜனை கொலை செஞ்சது ரஜினி ரசிகர்களா..?

திடீரென பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் ஹார்ட் அட்டாக்கில் மரணம் என்ற செய்தி வலைதளம் முழுக்க பரவியது. நல்லா இருக்கிற மனுஷனை பத்தி திடீரென எப்படி தவறான செய்தி பரவியது என்று விசாரித்தால், அதற்கு பின்னே இருப்பது ரஜினி ரசிகர்களாம்.


ஆம், சில தினங்களுக்கு முன் ஒரு மேடையில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன், ரஜினி குறித்து தாறுமாறாக பேசினாராம். ‘உன் பாடி கண்டிஷன் எனக்குத்தான் தெரியும். ஒரு கூட்டத்துல பேசிட்டு இன்னொரு கூட்டத்துக்கு போறதுக்குள்ள செத்துப் போயிருவே’ என்றெல்லாம் ரஜினியின் உடல் குறித்து தரம் தாழ்ந்து பேசியிருந்தார்.

அந்த விவகாரம்தான் ரஜின் ரசிகர்களை சீண்டிவிட்டதாம். அதனால்தான், ஆர்.சுந்தர்ராஜனுக்கு திடீர் மாரடைப்பு. காலமானார் என்று சோஷியல் மீடியாவில் நம்பும்படி ட்விட் போட்டுவிட்டார்கள். உறவினர் வீட்டு விசேஷத்துக்கு போயிருந்த ஆர்.சுந்தர்ராஜனுக்கு ஏகப்பட்ட போன்கள்.

சுந்தர்ராஜன் உயிருடன் இருக்கிறார், நலமாக இருக்கிறார் என்று சொல்லிச்சொல்லியே அவரது மகனும், குடும்பத்தாரும் டயர்டாகி விட்டார்களாம். ரஜினியை தரம் தாழ்த்தி விமர்சனம் செஞ்சா, இப்படித்தான் அடிப்போம் என்று சொல்கிறார்களாம் ரஜினி ரசிகர்கள்.

திராவிட ரத்தம் உங்களுக்கும் எப்படிப்பா வந்துச்சு?