எடப்பாடியை எச்சரிக்கை செய்கிறாரா பிரேமலதா..? குட்டக்குட்ட குனிய மாட்டாராம் விஜயகாந்த்.

இன்று விஜயகாந்த், பிரேமலதா திருமண நாளும், உள்ளாட்சியில் தேர்வுபெற்ற ஒருசிலருக்கான பாராட்டு விழாவும் விஜயகாந்த் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மாலை மாற்றிக்கொண்டார்கள்.


அதன்பிறகு பேசிய பிரேமலதா வழக்கம்போல் டென்ஷனாகப் பேசினார். ‘‘கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க.தான். ஆனால், கூட்டணி தர்மத்துக்காக இனியும் குட்டக்குட்டக் குட்டு வாங்கும் ஜாதி இல்லை. தே.மு.தி.க. இளைஞர்கள் யார் என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வீரவசனம் பேசினார். 

மேலும் அவர், ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக வரும்.விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம்’’ என்று சபதம் செய்திருக்கிறார். அடுத்து வழக்கம்போல் திக்கித்திணறி பேசினார் விஜயகாந்த். அதாவது, ‘விரைவில் நலம் பெற்று மீண்டும் வருவேன்’ என்று சொன்னார். இதைத்தான் கடந்த 3 மாதங்களாக எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணியைப் போன்று எப்படியேனும் ஒரே ஒரு எம்.பி. பதவி வாங்கி டெல்லிக்குப் போகவேண்டும் என்ற ஆசை பிரேமலதாவுக்கு வந்துவிட்டதாம். அதற்கு எடப்பாடி இன்னமும் எஸ் சொல்லவே இல்லையாம்.

அதற்கு எச்சரிக்கை தரும் விதமாகத்தான் குட்டக்குட்ட குனிய மாட்டோம் என்று குரல் கொடுக்கிறாராம் பிரேமலதா.