எடப்பாடிக்கு ரகசியமாக வேலை செய்கிறாரா பிரசாந்த் கிஷோர்? இடைத்தேர்தல் தோல்விக்கு இவர்தான் காரணமா?

அரசியல் புரோக்கர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோருக்கு அறிமுகம் தேவையில்லை. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் படித்துவிட்டு இப்போது இந்தியாவில் பணத்துக்காக தேர்தல் வியூக நிபுணராக செயலாற்றி வருகிறார்.


காசு கொடுத்தால் எந்தக் கம்பெனிக்காகவும் வேலை பார்ப்பார் என்பதை அவரது வாடிக்கையாளர்கள் பட்டியலைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆம் இவரது கஸ்டமர்களாக பிரதமர் மோடி, நிதிஷ் குமார், ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இப்போது எடப்பாடி பழனிசாமியும் ரகசியமாக சேர்ந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

இவரது சிட்டிசன்ஸ் ஆஃப் கவர்னன்ஸ் நிறுவனத்தில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்கள்தான் இரவு, பகல் பாராமல் பல பொய் செய்திகளை சமூக வலை தளத்தில் பரப்புகிறார்கள்.

இவர்களுடைய கட்சித் தலைவர் என்ன உடை அணிய வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், எப்படி கை அசைக்க வேண்டும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும், எப்படி முடி தாடி மீசை வைத்து கொள்ள வேண்டும் என்று சகலத்தையும் ஒத்திகை பார்த்து நிபுணர் குழு சொல்லும். மேலும் இவருக்கு பல மீடியா தொடர்பும் உண்டு, அவர்களிடமும் பேரம் பேசி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார் என்று சொல்லப்படுகிறது.

இப்போது இவர் எடப்பாடியாருக்கு ரகசியமாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. அதன்படி தமிழகத்தில் நடக்கப் போகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ல் நடக்க போகிற தேர்தலுக்கு இப்போது இருந்தே வேலை தொடங்கி விட்டாராம். 

இப்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. பற்றி எந்த விவாதமும் இல்லாமல் பஞ்சமி நிலம், மிசா கைது என்று தி.மு.க.வை சுற்றியே பரபரப்பு சுற்றுவதற்குக் காரணம் பிரசாந்த் கிஷோர் என்றுதான் சொல்கிறார்கள்.

நிஜமாவாப்பா..?