ஞாயிற்றுக் கிழமை மின்சாரத்தை கட் செய்யப் போறாங்களா..? என்னடா விளையாட்டு இது.

உலகமே கொரோனா கொடுமையில் சிக்கித் தவிக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி சொல்ல வந்தார் நமது பிரதமர்.


பொருளாதார மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடியைப் பற்றி பேசி மக்களை துன்பத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

அதனால்தான் முன்பு கைதட்டியது போன்று இப்போது விளக்கை அணையுங்கள் சொல்லி கலகலப்பு காட்டியிருக்கிறார். எப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் என்று பா.ஜக.வினர் பாராட்டி வரும் வேளையில், பிரதமரின் வேண்டுகோளை சிறப்பாக நிறைவேற்ற தமிழக அரசு முடிவுக்கு வந்துவிட்டதாம்.

ஆம், வரும் 5ம் தேதி 9 மணி தொடங்கி கூடுதலாக சில நிமிடங்கள் மின்சாரத்தை நிறுத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி யோசனை தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் தமிழகமே மோடியின் அடிமை என்பதை உணர்த்திவிட முடியும் என்று சிந்தித்திருகிறாராம்.

இதே பாணியில் அடுத்த வாரம் மீண்டும் தொலைக்காட்சியில் பேச இருக்கும் நரேந்திர மோடி, கொரோனா வைரஸை எதிர்த்து எல்லோரும் மாட்டு கோமியத்தை ஒரே நேரத்தில் குடிக்கலாம் என்று அறிவிக்க இருக்கிறாராம். இப்போதே வாங்கி ஸ்டாக் வையுங்கள் மக்களே…