எடப்பாடி பழனிசாமி அனுப்பிய ஃபைலை தூக்கிப் போட்டாரா பன்னீர்..? கோட்டை வட்டார கிசுகிசு

எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னாலும், அதனை அப்படியே நிறைவேற்றி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.


இந்த நிலையில், எடப்பாடி அனுப்பிய ஃபைலை கையெழுத்துப் போடாமல் ஓ.பி.எஸ். தூக்கிப் போட்டுவிட்டார் என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சு உலவுகிறது. என்னவென்று விசாரித்தோம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, கையெழுத்துப் போடுமாறு பன்னீருக்கு ஃபைல் அனுப்பிவைத்தாராம் முதல்வர் பழனிசாமி. அந்த ஃபைலைத்தான் தூக்கிப்போட்டு, கையெழுத்துப் போடமுடியாது என்று சொல்லிவிட்டாராம்.

ஏனென்றால், அந்த ஃபைலில் இருந்த மூன்று பேருமே எடப்பாடி பழனிசாமியின் ஆட்களாம். ஆம், தம்பிதுரை, தளவாய்சுந்தரம் ஆகியோர் பெயருடன் முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த் பெயரும் இருந்ததாகச் சொல்கிறார்கள். இதை கண்டுதான் எரிச்சல் ஆனாராம் பன்னீர்.

என்னுடைய மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை தட்டிப் பறித்தார்கள், இப்போது என்னுடைய ஆதரவாளர்களை தடுக்கிறார்கள் என்று கொந்தளித்திருக்கிறார். அப்படியென்றால் இருவருக்கும் மோதல் வருமா என்று கேட்டால், ‘சேச்சே, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, மீண்டும் முதல்வர் ஃபைல் அனுப்பி போடச்சொன்னால் நிச்சயம் போட்டுவிடுவார்’ என்கிறார்கள்.

சூப்பரோ சூப்பர்.